உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் மேல்நிலைப்பள்ளியில் வாழ்வியல் பயிற்சி முகாம்

புகழூர் மேல்நிலைப்பள்ளியில் வாழ்வியல் பயிற்சி முகாம்

கரூர், புகழூர் அரசு மருத்துவ மனை சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாழ்வியல் பயிற்சி முகாம், தலைமையாசிரியர் விஜயன் தலைமையில் நடந்தது.அதில், மாணவர்கள் போதை பொருட்களை முற்றிலும் தவிர்த்தல், இணையதளத்தை கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படுத்துதல் குறித்து, மன நல மருத்துவர் செந்தில் குமார் விளக்கம் அளித்து பேசினார். முகாமில், உதவி தலைமையாசிரியர்கள் பொன்னுசாமி, யுவராஜா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன், செஞ்சுருள் மன்ற பொறுப்பாசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கஜலட்சுமி, ஜெரால்டு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி