உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லோக்சபா தேர்தல் பணி: பா.ஜ., பூத் ஏஜென்டுகளுக்கு பாராட்டு

லோக்சபா தேர்தல் பணி: பா.ஜ., பூத் ஏஜென்டுகளுக்கு பாராட்டு

கரூர் : கரூர், கோவை சாலையில் பா.ஜ., தேர்தல் காரியாலயத்தில், தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட பூத் ஏஜென்ட்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்து பேசியதாவது: கட்சியின் தலைமை முழு சுதந்திரம் அளித்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. அதே முழு சுதந்திரத்தை உங்களுக்கு அளித்து, கட்சி பணியாற்ற கேட்டுக் கொள்கிறேன். கட்சியினருக்கு ஒரு பிரச்னை என்றால், அங்கு முதல் ஆளாக நான் வந்து நிற்பேன். வரும் சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், கரூர் மேற்கு நகர தலைவர் முருகேஷ், கரூர் தெற்கு மாநகர தலைவர் ரவி, ஒன்றிய தலைவர் சரவணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ