உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

இண்டூர், விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை உதவி இயக்குனர் முத்து, தர்மபுரி மாவட்ட உதவி புவியியலாளர் மஞ்சுநாத் ஆகியோர், கனிம வளம் கடத்தப்படுவது தொடர்பாக, கடந்த, 22 அன்று நள்ளிரவு, 1:20 மணிக்கு தர்மபுரி ஒகேனக்கல் சாலையில், பி.எஸ்., அக்ரஹாரம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லேலண்ட் டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 3 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவர் தப்பிச்சென்ற நிலையில், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, இண்டூர் போலீசில் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை