உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கொள்ளையை தடுக்க லாரி உரிமையாளர்கள் மனு

மணல் கொள்ளையை தடுக்க லாரி உரிமையாளர்கள் மனு

கரூர்:'கரூர் மாவட்டம், காவிரியாற்றில் மணல் கொள் ளையை தடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்ல ராசாமணி, நேற்று கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையாவிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவில் உள்ளதாவது: கரூர் மாவட்டம், காவிரியாற்று பகுதியில், இரவு நேரத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூர் கலெக்டர், பொதுப்பணி துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினரிடம், பலமுறை புகார் மனு கொடுத்தும் பயன் இல்லை. இதில், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை நிறுத்த வேண்டும். மணல் கொள்ளையை கண்டித்து செப்., 30ம் தேதி இரவு லாரி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் காவிரியாற்றில் இறங்கி, லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து, போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ