வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2 நண்பர்களின் ஃபோட்டோக்கள் கிடைக்கவில்லையா
மேலும் செய்திகள்
கொலை முயற்சி வழக்கு விவசாயிக்கு 6 ஆண்டு சிறை
01-Jul-2025
பசுபதிபாளையம்:வாலிபர் குத்தி கொல்லப்பட்டது குறி த்து, அவரது நண்பனை போலீசார் கைது செய்தனர். கரூர், காந்திகிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 38. இவரது நண்பர் பசுபதிபாளையத்தை சேர்ந்த கண்ணன், 40, தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கண்ணன் வீட்டிற்கு ஆசைத்தம்பி சென்றுள்ளார். அங்கு, இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் துாங்கியுள்ளனர். நேற்று அதிகாலை, கண்ணன் பார்த்தபோது, ஆசைத்தம்பி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தார். பசுபதிபாளையம் போலீசார், ஆசைத்தம்பி உடலை கைப்பற்றி கண்ணனிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறியதாவது: மது அருந்தி கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த கண்ணன், கத்தியால் ஆசைத்தம்பியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதை அவர் விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இதையடுத்து கண்ணனை கைது செய்தோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
2 நண்பர்களின் ஃபோட்டோக்கள் கிடைக்கவில்லையா
01-Jul-2025