உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

கரூர், கரூர் அருகே, புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக, டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார், 37, என்பவர் அவரது டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, புகையிலை குட்கா பொருட்களை விற்றது தெரிய வந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், டீக்கடையில் இருந்து, 1,320 ரூபாய் மதிப்புள்ள, புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை