டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி
கரூர்:கரூர் மாவட்டம், பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 36; இவர் கடந்த, 5 மாலை, கரூர் அருகே, செல்லாண்டிப்பாளையம் தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென டூவீரில் இருந்து தவறி விழுந்த ஆனந்தராஜ், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆனந்தராஜின் மனைவி நித்யா, 34, அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.