உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பட்டதளச்சிஅம்மன் கோவிலில் மண்டல பூஜை அபிேஷகம்

பட்டதளச்சிஅம்மன் கோவிலில் மண்டல பூஜை அபிேஷகம்

குளித்தலை,: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., மேலவெளியூரில் பட்டத் தளச்சிஅம்மன் கோவில் உள்ளது.இங்கு விநாயகர், பட்டத் தளச்சிஅம்மன், ஆவளிவீரக்காள், மதுரை வீரன், தடிகொண்டராயன், கறிகொண்டராயன், தீப்பாஞ்சிஅம்மன், முனியப்பன் சன்னதிகள் உள்ளன.கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்தாண்டு நவ., 23ல் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 47 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று பரம்பரை தர்மகர்த்தா பாஸ்கர், திருப்பணிக்குழு தலைவர் மருத்துவர் கலையரசன் ஆகியோர் தலைமையில், 48வது நாள் மண்டல பூஜை நடந்தது.பின் கோவில் நிர்வாகம் சார்பாக, 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 13 அடி உயரத்தில் புதியதாக தேர் உருவாக்கப்பட்டது.இதன் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆயிரக்கணக்கானோர் புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை