உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுாரில் பகுதி சபா வார்டு குழு கூட்டம்

மருதுாரில் பகுதி சபா வார்டு குழு கூட்டம்

குளித்தலை, டிச. 12-குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., ஆதிநத்தம் கொலைக்கார மாரியம்மன் கோவில் முன், மனித உரிமைகள் தினவிழாவையொட்டி, பகுதி சபா வார்டு குழு கூட்டம் நடைபெற்றது. டவுன் பஞ்., இளநிலை உதவியாளர் சரவணன் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் பாப்பாத்தி, அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் சரவணன் தலைமையில், மற்றவர்கள் மனித உரிமைகள் குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் கணேசபுரம், மயிலாடும்பாறை, குப்புரெட்டிப்பட்டி, பணிக்கம்பட்டி கிராமத்தில் பகுதி சபா வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை