உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முனி முக்தீஸ்வரர் கோவிலில் மாசி மகா தேரோட்ட விழா

முனி முக்தீஸ்வரர் கோவிலில் மாசி மகா தேரோட்ட விழா

அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில் அகிலாண்டேஸ்வரி உடனமர் முனி முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா திருவிழா நடைபெறும். கடந்த, 15ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று யானை வாகனத்தில் வீதி உலா வழிபாடு, நாளை விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது, கடைவீதியில் இருந்து தேர் மேளதாளத்துடன் புறப்பட்டு மாரியம்மன், பகவதிஅம்மன் கோவிலை வந்தடையும். அங்கு இரவு முழுவதும் அபிஷேக ஆராதனை நடைபெறும். வரும், 25ம் தேதி காலை மாரியம்மன், பகவதிஅம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அகிலாண்டேஸ்வரி முனிமுக்தீஸ்வரர் கோவிலை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி