உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் கிராமத்தில் விநாயகர், முருகன், மாசி பெரியண்ண-சாமி, ஐய்யனார் சுவாமி, மருதை வீரன், வையாபுரி, கருப்பு-சாமி, அதிகாரிச்சியாயி அம்மன் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்-துள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணி மிகுந்த பொருட் செலவில் செய்து முடிக்கப்பட்டது.இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்தி ஊர் முக்கியஸ்தர்கள் கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த, 10ல் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து ஊர்வல-மாக சென்றனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், செய்யப்பட்டது. நேற்று காலை, 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை செய்து வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். விழாவில், பிள்ளபாளையம், மகிளிப்பட்டி, சாமிபிள்ளைபுதுார், முள்ளிப்பாடி, லாலாப்-பேட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை