மேலும் செய்திகள்
காளியம்மன் கோவில் விழா பக்தர்கள் பால்குட ஊர்வலம்
14-Jul-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கோட்டமேடு தேவேந்திரகுல தெருவில் அமைந்துள்ள மகாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 13ம் தேதி காலை கிராம மக்கள், பக்தர்கள் மேள தாளங்களுடன் குளித்தலை காவிரி ஆற்றில் பால் குடம் மற்றும் தீர்த்தக்குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக மேட்டு மருதுார் காளியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு ஊற்றி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுபால் குடம், தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கோட்டபோடு கொடிங்கால் பாலத்தில், கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். நேற்று காலை பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், மாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு கரகம் விடுதல் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.
14-Jul-2025