உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிலாளி மாயம் போலீசில் புகார்

தொழிலாளி மாயம் போலீசில் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியூரை சேர்ந்தவர் முருகேசன், 54, கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 28, ஆர்.டி. மலையில் உள்ள கம்பெனிக்கு, வேலைக்கு செல்வ-தாக கடந்த 26 காலை 9:00 மணியளவில் சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. கம்பெனியில் கேட்டபோது, வேலைக்கே வரவில்லை என்று தெரிய வந்தது. மேலும், பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகனை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ