வேலாயுதம்பாளையத்தில் மொபட் திருடியவருக்கு வலை
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.புகழூர் நாணப்பரப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சஞ்சய் குமார், 23; இவர் கடந்த, 20ம் தேதி இரவு வீட்டுக்கு முன், ேஹாண்டா ஆக்டிவா மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து, சஞ்சய் குமார் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.