புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் நடமாடும் மருத்துவ முகாம்
கரூர், புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகழூர், திருக்காடுதுறை ஆகிய பஞ்., பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், 50-வது கிராமமான பொன்னியாக்கவுண்டன்புதுாரில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், 830 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.இதுவரை, 6,455 பேர் பயனடைந்துள்ளனர்.