மேலும் செய்திகள்
தொழிலாளியை தாக்கிய 2 பேரிடம் விசாரணை
01-Feb-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா, 20; கூலித்தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில், கடந்த, 13 இரவு, யுவன் ராஜவேல், 24, என்பவருடன், சங்கரன் மலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, மேலடை கிரா-மத்தை சேர்ந்த குமார், சந்தோஷ் ஆகிய இருவரும், டூவீலரை மறித்து தாக்கி, மொபைல் போன், 6,000 ரூபாய், வெள்ளி சங்-கிலி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். பாதிக்கப்பட்ட யுவன் ராஜவேல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சையில் உள்ளார். சிவா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், குமார், சந்தோஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Feb-2025