உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபைல் போன் திருட்டு; இரு இளைஞர்கள் கைது

மொபைல் போன் திருட்டு; இரு இளைஞர்கள் கைது

கரூர் : பல்வேறு இடங்களில், மொபைல் போன்களை திருடிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகில் குமாரபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 49. இவர், வெங்கக்கல்பட்டி ரவுண்டானா அருகே, டூவீலரில் உள்ள டேங்க் கவரில் மொபைல் போனை வைத்துவிட்டு சென்றுள்ளார். அது திருடப்பட்டுள்ளது. இது குறித்து தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், மண்மங்கலம், முத்தமிழ்புரத்தை சேர்ந்த சிவகுமார், 23, கரூர் ரத்தினம் சாலையில் உள்ள கே.எம்.சி., காலனியை சேர்ந்த பீமா, 23 ஆகியோர் மொபைல் போன் திருடி சென்றது தெரியவந்தது. இவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், கரூர் நரசிம்மபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், தான்தோன்றிமலை கொளந்தானுாரை சேர்ந்த கனகராஜ், கரூர் தான்தோன்றிமலை கணபதிபாளையத்தை சேர்ந்த கனகராஜ் ஆகியோரிடம் இருந்தும் மொபைல் போன்களை திருடியது தெரியவந்தது. இரு இளைஞர்களையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை