உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: வாலிபர் கைது

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: வாலிபர் கைது

கரூர்: கரூரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த நாகராஜ், 25, கலெக்ஷன் பிரிவில், இரண்டாண்டுகளாக வேலை செய்து வந்தார். வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை வசூல் செய்த நாகராஜ், 25 லட்சத்து, 32 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்துள்ளார். நிதி நிறுவன அதிபர் மோகன் ராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி