உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவாயம் பஞ்சாயத்து பகுதியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்

சிவாயம் பஞ்சாயத்து பகுதியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், சிவாயம் கிராமத்தில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிவாயம் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி, சந்தையூர், இரும்பூதிப்பட்டி கிராமங்களில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், குடியிருப்பு வீடுகளில் பழைய கழிவு பொருட்கள் கண்டறிந்து அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், சாக்கடை கழிவுநீர் செல்லும் வழித்தடங்களில் தேங்கிய குப்பையை அகற்றுதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி ஆகியவை நடந்தன. மேலும் கொசுக்கள் பரவலை தடுக்கும் வகையில், பிளிச்சீங் பவுடர் தெளிப்பு பணி பார்க்கப்பட்டது. பணிகளை சுகாதார மேற்பார்வையாளர் ராஜா பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை