மேலும் செய்திகள்
பெண் தொழிலாளி மாயம்; தாய் புகார்
19-Nov-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த விஜயா, 47, கூலி தொழிலாளி. இவரது, 17 வயது மகள் நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த, 3 காலை 8:00 மணியளவில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பள்ளிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, தாய் விஜயா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
19-Nov-2024