உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையோரம் திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சம்

நெடுஞ்சாலையோரம் திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சம்

கரூர்,: தேசிய, மாநில நெடுஞ்சாலை திறந்தவெளி கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்து ஏற்படுவதற்கு முன், கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகளால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந்த கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அல்லது கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில் மட்டும் சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத சாலையோர கிணறுகள் மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான இடங்களில் திறந்தவெளியில் இருந்த கிணறுகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையிலிருந்து பள்ளமான பகுதியில் கிணறு உள்ளதால், வாகனங்கள் நிலைதடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் இதுபோன்ற கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை