குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர், கட்டளை-மாயனுார் சாலை குண்டும், குழியுமான உள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கட்டளை- மாயனுார் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு லாரிகள் உள்பட பல்வேறு வாக-னங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் பள்ளிகள், ஏராளமான வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள, நீர்த்தேக்க கிணறுக-ளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்-கின்றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்கநாதபுரம், மேலமாயனுார், கீழமாயனுார் உள்ளிட்ட, பல்-வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.இதனால், அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்-றனர். இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடை-கின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை உடனடியாக சீர-மைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.