உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளப்பட்டியில் விளையாட்டு மைதானம் தேவை

பள்ளப்பட்டியில் விளையாட்டு மைதானம் தேவை

அரவக்குறிச்சி அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் சாதித்து வருகின்றனர். ஆனால், பள்ளப்பட்டியில் விளையாட்டு மைதானம் இல்லை. பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள காலி இடத்தில் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடும்போது அவ்வழியாக நடந்து செல்வோர் மீது, பந்து படுவது வாடிக்கையாகி விட்டது.இதுகுறித்து ஆறு மாதங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோவிடம் பள்ளப்பட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தபோது, 'இடத்தை காட்டினால் மைதானம் கட்டித்தர தயார்' என உறுதி அளித்தார். எனவே, மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளப்பட்டியில் ஒருங்கிணைந்த மைதானம் அமைத்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை