பயணிகள் நிழற்கூடம ்அருகே புதிய சிமென்ட் பெஞ்சுகள்
பயணிகள் நிழற்கூடம ்அருகேபுதிய சிமென்ட் பெஞ்சுகள்கரூர், நவ. 5-நிழற்கூடம் அருகே, பயணி கள் அமரும் வகையில், புதிதாக சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., கோவை சாலையில், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பிரிவு பஸ் ஸ்டாப்பில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பயணிகள் நிழற் கூடம் கட்டப்பட்டது. பஞ்., நிர்வாகம் சார்பில் பயணிகள் அமர வசதியாக, சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டன. ஆனால், நாளடை வில் சிமென்ட் பெஞ்சு கள் உடைந்தன. இதனால், பயணிகள் உட்கார முடியாமல், நீண்ட நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆண்டாங் கோவில் கிழக்கு பஞ்., நிர்வாகம் சார்பில், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பிரிவு பஸ் ஸ்டாப்பில், புதிதாக இரண்டு சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.