புதிய தீயணைப்பு நிலையம் குளித்தலையில் திறப்பு
குளித்தலை: குளித்தலையில், புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.குளித்தலை, பெரியபாலம் பரிசல் துறையில் தனியார் இடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது, மத்திய மண்-டல துணை இயக்குனர் முரளி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர்கள் கருணாகரன், கோமதி, திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், ஜீவா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், வீரர்கள், பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். குளித்தலையில் தீயணைப்பு நிலை-யத்தில், தற்போது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.