உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயர்மட்ட மின் கம்பத்தில் புதிய விளக்குகள் பளிச்

உயர்மட்ட மின் கம்பத்தில் புதிய விளக்குகள் பளிச்

கரூர் கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் பகுதியில், உயர் மட்ட மின் கம்பத்தில், புதிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் சாலை மற்றும் தின்னப்பா கார்னர் சாலைகள் பிரியும் இடத்தில், மனோகரா கார்னரில் நான்கு பகுதிகளிலும், தானியங்கி சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மனோகரா கார்னரில் உள்ள ரவுண்டானாவில், உயர்மட்ட கம்பத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மனோகரா கார்னரில் உள்ள உயர்மட்ட மின் கம்பத்தில், புதிய விளக்குகளை பொருத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். புதிய மின் விளக்குகளால், அப்பகுதி வெளிச்சத்தில் 'பளிச்' என காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ