உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்லாண்டியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

செல்லாண்டியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம் : மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபி ேஷகம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு வழிபாடு பூஜையில் கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனுார், சேங்கல், திருக்காம்புலியூர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலிலும் அமாவாசை சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது. அம்மனுக்கு அபி ேஷகம், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை