வாக்காளர் திருத்த புதிய படிவங்கள் 24க்குள் முடிவு: கலெக்டர் தகவல்
கரூர்: வாக்காளர் திருத்தம் தொடர்பாக, புதிய விண்ணப்ப படிவங்கள் மீது டிச.,24க்குள் முடிவு எடுக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அரவக்குறிச்சி அருகில், ஆண்டிப்பட்டி கோட்டை வி.ஐ.பி., நகர், ஆலமரத்துப்பட்டி, ஆண்டிப்பட்டி, கோட்டை ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் முகாம்களை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது: புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், வெளிநாட்டு வாக்காளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறப்பு, இடம் பெயர்வு, இரட்டை பதிவு ஆகியவற்றை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் ஆகியவை தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இந்த படிவங்கள் மீது வரும், 24-க்குள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, கூறினார்.