உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

வைக்கோல் கட்டு விலை உயர்வுகிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வைக்கோல் விலை உயர்ந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மகிளிப்பட்டி, வல்லம், பிள்ளபாளையம், வீரவள்ளி, சிந்தலவாடி, குழந்தைப்பட்டி, அந்தரப்பட்டி, கொம்பாடிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள், டிராக்டர் இயந்திரம் கொண்டு அடிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வைக்கோல் ஒரு கட்டு, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு கட்டு ஒன்று, 200 ரூபாய் விற்ற நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது.மின்னணு பரிவர்த்தனையில்பொருட்களை பெறலாம்அரவக்குறிச்சி வேளாண் விரிவாக்க மையத்தில், மின்னணு பண பரிவர்த்தனை முறையில், வேளாண் இடுபொருள்களை விவசாயிகள் பெறலாம்.இது குறித்து, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி கூறுகையில்,''அரவக்குறிச்சி வேளாண் விரிவாக்க மையத்தில் நடப்பு ஆண்டு முதல், வேளாண் இடுபொருள்களுக்கான பணம் பரிவர்த்தனை மின்னணு பண பரிவர்த்தனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், பொருள்களை வாங்க வரும் விவசாயிகள் அதற்கான தொகையை ஏ.டி.எம். கார்டு அல்லது கூகுள் பே மூலமாக செலுத்தி பெறலாம்,'' என்றார்.வருவாய் துறை அலுவலர் சங்க முப்பெரும் விழாதமிழ்நாடு மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், முப்பெரும் விழா கரூரில் நடந்தது.சங்க தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். துணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற சந்திரசேகர், அருள், ரவிக்குமார் ஆகியோரை பாராட்டி டி.ஆர்.ஓ., கண்ணன் பேசினார். மாநில பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன், செயலாளர் செந்தில் குமார், மாவட்ட துணைத்தலைவர் சண்முக பிரகாசம், செயலாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் மோகன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். கால்நடை மருந்தக உதவி டாக்டர் கோபிநாத், கால்நடை ஆய்வாளர்கள் முத்துக்குமார், பெரியசாமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கோழிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், கோழிகளுக்கு உரிய காலங்களில் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட வேண்டிய தடுப்பு ஊசிகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். விவசாயிகள் திரளாக பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.நிகழ்ச்சியில், மண்டல துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.விபத்து ஏற்படும் பகுதிகளில்பேரி கார்டுகள் வைக்க வேண்டும்கரூர் வழியாக செல்லும், தேசிய நெடுஞ் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க, பேரிகார்டுகளை வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகரை சுற்றி மதுரை, திருச்சி, சேலம், கோவை நெடுஞ்சாலைகள், ஈரோடு மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. அதில் நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இணையும், கிராம சாலை பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதிகளவில் விபத்து ஏற்படும் கோடங்கிப்பட்டி பிரிவு, வெங்ககல்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு, சுக்காலியூர் பிரிவு மற்றும் மண்மங்கலம் பகுதியில், காவல் துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், பல இடங்களில் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், கரூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, பேரிகார்டுகளை வைக்க, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.கரூரில் அண்ணாதுரை நினைவு தினம்கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைதி ஊர்வலம் கோவை சாலை வழியாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா வந்தடைந்தது, பின்னர், அங்கிருந்த அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோவன், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள, அண்ணா துரை சிலைக்கு மாவட்ட அவைத்தலைர் திருவிகா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சிவசாமி, மாவட்ட பாசறை செயலர் கமலகண்ணன், எம்.ஜி. ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துகுமார், முன்னாள் மாநகர செயலர் நெடுஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியை வீட்டில்மொபைல் போன் திருட்டுபள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில், மர்ம நபர் நுழைந்து மொபைல்போன் திருடியுள்ளார்.குளித்தலை, அண்ணா நகர் மாணிக்க விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுசிலா கணேசன். இவர் இரும்பூதிபட்டி யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார். கடந்த, 1 மதியம், 3:30 மணியளவில் போதை ஆசாமி ஒருவர், சுவர் தாண்டி வந்து வீட்டில் இருந்த விலை உயர்ந்த மொபைல்போனை எடுத்துக்கொண்டு தப்பினார். இது அருகில் உள்ள வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. பதிவான வீடியோவை தலைமை ஆசிரியரின் மகன் மணிகண்டன், குளித்தலை போலீசில் புகாராக கொடுத்தார். குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மாணிக்க விநாயகர் கோவில்கும்பாபிஷேக கோலாகலம்குளித்தலை, அண்ணா நகரில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது. புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, அப்பகுதி மக்கள் மற்றும் மாணிக்க விநாயகர் ஆன்மிக அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். கடந்த மாதம், 30ம் தேதி குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டது. நீரை கும்பத்தில் வைத்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை சிவாச்சாரியார், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாணிக்க விநாயகர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.மோசமான நிலையில் தீர்த்தபாளையம் பாலம்தீர்த்தபாளையம் பகுதியில் உள்ள சிறிய பாலம், மோசமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியில் இருந்து தீர்த்தபாளையம் பகுதி செல்லும் சாலை உள்ளது. இதன் நடுவில் பாசன வாய்க்கால் பாலம் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமையான பாலமாக இருக்கிறது. பாலம் வழியாக விவசாயிகள், மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சின்ன பாலத்தின் தடுப்புகள் உடைந்து சிதலமடைந்தது. மேலும் தண்ணீர் செல்லும் போது தடுப்புச்சுவர் கரைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது, சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, பாதிப்படைந்துள்ள சிறிய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண்மை துறைசார்பில் சுற்றுலாகரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டுதல் மற்றும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், விவசாயிகள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில், பொருட்களின் தரத்தை மதிப்பு கூட்டுதல், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளும் முறைகள், விற்பனை செய்யும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்மை துறை உதவி இயக்குனர் சண்முக சுந்தரம், உதவி பேராசிரியர்கள் செந்தாமரை செல்வி, கலைச்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ் மற்றும் வாங்கல், நெரூர், குப்புச்சிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனத்தில்தாய், தந்தையர் வாழ்த்தும் பாத பூஜை விழாகரூர், பரணி பார்க் கல்வி நிறுவனத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தாய், தந்தையர் வாழ்த்தும் பாத பூஜை விழா நடந்தது.பரணி கல்வி குழும தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக்சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெள்ளக்கோவில் ஞானசம்பந்தன் ஓதுவார் அம்மையப்பர் வேள்வி மற்றும் மாணவர்களை அவர்தம் தாய் தந்தையர் வாழ்த்தும் பாத பூஜை விழாவை தமிழ் முறைப்படி செய்தார். பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் பயிலும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், 1,500 மாணவர்கள் தங்கள் தாய், தந்தையருக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். அவர்களை பெற்றோர் வாழ்த்தினர். தொடர்ந்து பாதபூஜையின் சிறப்பு குறித்து பரணி கல்விக் குழுமங்களின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் பேசினார். இதில் மாணவர்கள், பெற்றோர் என, 4,500 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லுாரி முதல்வர் சாந்தி உட்பட பலர் செய்திருந்தனர்.வெண்டைக்காய் சாகுபடிபணியில் விவசாயிகள்கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள் ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, நரசிங்கபுரம், உடைய தோட்டம், அந்தரப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக விளை நிலங்களில் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. செடிகள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காய்கள் பிடித்தவுடன் பறிக்கப்பட்டு, உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.இருபுறங்களிலும் முற்செடிகள்அகற்றிட வலியுறுத்தல்குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., நாவலக்காப்பட்டி முதல், பூவாயிபட்டி வழியாக வடசேரி செல்லும் முக்கிய சாலை உள்ளது. நாவலக்காப்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்குள்ள சாலையை, தார்ச்சாலையாக மாற்றி தரக்கோரி பலமுறை அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த சாலை வழியாக, பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் உள்ள முற்செடிகள் நன்கு வளர்ந்து, பொது மக்கள் செல்ல முடியாத வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த கிராமத்தை கலெக்டர் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை