உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தமில்லை; அமைச்சர்

அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தமில்லை; அமைச்சர்

கரூர்: ''தமிழக மின்வாரியம் கடந்த மூன்றாண்டுகளில், அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை,'' என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.கரூர் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட்டில், புதிய வணிக வளாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதை நேற்று பார்வையிட்டார். அப்போது 'தொழிலதிபர் அதானி, சூரிய ஒளி மின்சாரத்தை பெறுவதற்கு, 25 கோடி டாலர் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து, மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளதாக, அமெரிக்க நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து, உங்கள் கருத்து என்ன?' என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு அவர், ''அதானி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், பல மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும், கடந்த மூன்றாண்டுகளில் போடவில்லை. தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு, 1,500 மெகாவாட் மின்சாரம் பெற, மத்திய அரசின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் மிக மிக குறைந்த விலையில், ஒரு யூனிட்டுக்கு, 2.61 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 7.01 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ