உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 18 நாளாக குடிநீர் வினியோகம் இல்லை செங்குந்தபுரம் மக்கள் கொந்தளிப்பு

18 நாளாக குடிநீர் வினியோகம் இல்லை செங்குந்தபுரம் மக்கள் கொந்தளிப்பு

கரூர், கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும், 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 422 பேருக்கு தினமும், 290.74 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 1 லிருந்து, 14 வார்டுகளுக்கு வாங்கல் நீரேற்று நிலையத்திலிருந்தும், 15லிருந்து 32 வார்டுகளுக்கு நெரூர் நீரேற்று நிலையத்திலிருந்தும், 33லிருந்து, 48 வரை கட்டளை நீரேற்று நிலையத்திலிருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 24வது வார்டுக்குட்பட்ட செங்குந்தபுரம், 6 முதல், 12 கிராஸ், ராமகிருஷ்ணபுரம் வடக்கு ஆகிய பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரியகுளத்துபாளையம் மேல்நிலை தொட்டியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டும் போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வடிகால் கட்டுமான பணி முடிந்த பின், குடிநீர் குழாய் சரிசெய்ய முடியும் என, மாநகராட்சி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் இப்பகுதியில் கடந்த, 6ம் தேதி முதல் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டு விட்டது. கடந்த, 18 நாட்களாக கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. குடிநீர் கிடைக்காமல், லாரி தண்ணீரை விலைக்கு வாங்குகின்றனர். மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதால், 6 முதல் 9 கிராஸ் வரை மட்டும், 19ம் தேதி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதுவரை மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை