மேலும் செய்திகள்
சித்த மருத்துவ பிரிவு மருத்துவக்கழிவுகள் அகற்றம்
20-Feb-2025
கரூர்: புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில், துாய்மை பணி நடந்தது. அதில், மருத்துவமனை வளாகத்தில் இருந்த, பிளாஸ்டிக் கழிவுகள் மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள செடிகொடிகள் அகற்றப்பட்டு, மாணவர்கள் மூலம் துாய்மைப்படுத்தப்பட்டது. அப்போது, பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன், உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, மருத்துவ அலுவலர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.
20-Feb-2025