உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாமக்கல்லில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கத் திட்டம் இன்று துவக்கம்

நாமக்கல்லில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கத் திட்டம் இன்று துவக்கம்

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஊட்டச்சத்து வேளாண் இயக்கத் திட்டம் துவக்க விழா நடக்கிறது.தமிழக வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தினை இன்று (4ம் தேதி) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில், 15 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வேளாண் துறை மூலமாக, ஊட்டச்சத்து பயறு வகை தொகுப்பு (மரத்துவரை, காராமணி, அவரை) மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி தொகுப்பு 6 விதைகள் கொண்ட காய்கறி பொட்டலங்கள் (தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை, கொத்தவரை) மற்றும் பழச்செடி தொகுப்பு 3 விதமான பழச்செடிகள் (கொய்யா, பப்பாளி, எலுமிச்சை) ஆகியவை 100 சதவித மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி மூலமாகவோ, tnhorticulturetrn.gov.in/kit என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் அல்லது வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ