உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரண்டு பாலங்கள், அணுகு சாலை பணிகளை ஆய்வு செய்த அதிகாரி

இரண்டு பாலங்கள், அணுகு சாலை பணிகளை ஆய்வு செய்த அதிகாரி

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் அருகில் செல்லும், கட்டளை வாய்க்கால் நடுவில் கட்டப்பட்ட இரண்டு பாலங்கள் மற்றும் அணுகு சாலை பணிகளை, கரூர் கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மைலம்பட்டி, பழையஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி, மேட்டு மகாதானபுரம் அருகில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் நடுவில், இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. பாலம் பணிகள் முடிந்த நிலையில், அதன் அருகில் வாகனங்கள் செல்லும் வகையில் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் தரம் குறித்து, கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார் நேற்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். பாலம் பணிகள் முடிந்துள்ள நிலையில், சாலை வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அசாரூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி