உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரத்து அதிகரிப்பால் வெங்காயம், செவவாழை பழம் விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் வெங்காயம், செவவாழை பழம் விலை குறைவு

கரூர், வரத்து அதிகரிப்பால் வெங்காயம் மற்றும் செவ்வாழை பழம் விலை குறைந்துள்ளது.தமிழகத்தில் சின்ன வெங்காயம் பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது, புதிய வெங்காயம் வரத்து, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், விலை குறைய தொடங்கியுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.குறிப்பாக, சாதாரண ரகம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்கும், முதல் தரம் வெங்காயம், 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 80 ரூபாய் வரை விற்றது. அதேபோல், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனால், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 35 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் பெரிய வெங்காயம், 70 ரூபாய் வரை விற்றது.* தமிழகத்தில் செவ்வாழை பழம் ஈரோடு, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கரூருக்கு, செவ்வாழை பழம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், உள்ளூர்களில் வேன் மூலம் செவ்வாழை பழம், அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.நடப்பாண்டு தொடக்கத்தில், ஒரு செவ்வாழை பழம், 15 ரூபாய் வரை விற்றது. தற்போது கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு பழம் ஐந்து ரூபாய் முதல், எட்டு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் செவ்வாழை பழத்தை வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ