உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானம்

மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானம்

பள்ளிப்பாளையம் : காவிரி பகுதியை சேர்ந்த மூளை சாவு அடைந்த கல்லுாரி மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.பள்ளிப்பாளையம் அருகே, காவிரி அடுத்த ராஜாஜி நகரை சேர்ந்த விஜயகுமார் மளிகை கடை வைத்துள்ளார், இவரது மகள் சஞ்சீவ்விகாஷினி, 19, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். சஞ்சீவ்விகாஷினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது, தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை.சஞ்சீவ்விகாஷினி மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. நேற்று மதியம், சஞ்சீவ்விகாஷினி உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை