உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ப.வேலுார் பொன்னி மெடிக்கல் சென்டரில் சர்க்கரை நோய்க்கு தனிப்பிரிவு துவக்க விழா

ப.வேலுார் பொன்னி மெடிக்கல் சென்டரில் சர்க்கரை நோய்க்கு தனிப்பிரிவு துவக்க விழா

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் ஸ்ரீபொன்னி மெடிக்கல் சென்டர் செயல்பட்டு வருகிறது. தன் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றமாக, சர்க்கரை நோய்க்கு தனிப்பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது.தலைமை டாக்டர் அரவிந்த் சுப்பிரமணி தலைமை வகித்தார். டாக்டர்கள் ராமசாமி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹார்மோன்கள் பிரிவு தலைமை டாக்டர் பழனி வேல், புதிய மருத்துவ பிரிவை திறந்து வைத்து பேசியதாவது: இந்த மருத்துவமனையில், கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட இலவச சர்க்கரை நோய் சிகிச்சை முகாம் மூலம், 5,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வளிக்க, ஹார்மோன்கள் (உட்சுரப்பியல்) பிரிவு துவங்கப்படுகிறது. நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் சம நிலையின்மை போன்ற பிரச்னைகளுக்கான சிறப்பு சிகிச்சையும், நோயாளிகளுக்கான வாழ்க்கை முறையை மாற்ற ஆலோசனைகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். ப.வேலுார் டவுன் பஞ்., முன்னாள் தலைவர் பொன்னிமணி, சவுடாம்பிகா கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ