மேலும் செய்திகள்
சுங்க வசூல் ஏலம் ரத்தால் அதிருப்தி
15-Mar-2025
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில் நடைபெறும், 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, கடைகளுக்கான சுங்கம் வசூ-லிக்கும் ஏலம், நகராட்சி அலுவலகத்தில் வரும் ஏப்., ௩ல் நடைபெறுகிறது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில், புகழ்பெற்ற சந்தனக்கூடு உரூஸ் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறு வது வழக்கம். ரம்ஜான் பண்டிகையில் இருந்து, 15 நாட்கள் கழித்து நடைபெறும், 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் இடங்களின் சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம், பள்ளப்பட்டி நகராட்சி அலு-வலகத்தில் ஏப்., 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு நகராட்சி கமி-ஷனர் தலைமையில் நடைபெற உள்ளது.இது குறித்து, நகராட்சி கமிஷனர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:ஏலம் கோர விருப்பமுள்ளவர்கள், 1 லட்சம் ரூபாய் ஏல முன்-வைப்பு தொகையை ரொக்கமாக செலுத்தி ஏலம் கோரலாம். வைப்புத்தொகை செலுத்தியவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட உரையில், ஒப்பந்த புள்ளியை குறிப்பிட்டு அலுவலகத்தில் ஏலம் ஆரம்பிப்-பதற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மூடி முத்திரை-யிடப்பட்ட உரைகள், பகிரங்க ஏலம் முடிந்தவுடன் வருகை தந்தி-ருப்போர் முன்னிலையில் திறக்கப்படும். ஏலம் முடிவுற்றதும், ஏலத்தொகை முழுவதையும் உடனடியாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதர ஏல நிபந்தனைகளை நகராட்சி அலுவ-லகத்தில் அலுவலக நேரங்களில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
15-Mar-2025