கரூர் மாநகராட்சி ஆபீசில் உலா வரும் நாய்களால் பீதி
கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், உலா வரும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில், 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், நாள்தோறும் பல்வேறு பணிகள் காரணமாக, 500க்கும் மேற்பட்ட, பொதுமக்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மாநகராட்சி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மாநகராட்சி வரவேற்பு பகுதி, வரி செலுத்தும் பகுதிகளில், நாய்கள் உள்ளே சென்று ஹாயாக படுத்துக்கொள்கின்றன. அதை விரட்டினால், கடிக்க வருவதாக மாநகராட்சி ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், கரூர் மாநகராட்சி வளாகத்தில் சுற்றி திரியும், 20க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து செல்ல கரூர் நகராட்சி அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.