உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம் விபத்தில் சிக்கும் அபாயம் காத்திருப்பு

நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம் விபத்தில் சிக்கும் அபாயம் காத்திருப்பு

கரூர், தவுட்டுப்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில், தவுட்டுப்பாளையம் மேம்பாலத்தின் இருபுறமும் வேலாயுதம்பாளையம், கொடுமுடி, ஈரோடு நகரங்களுக்கு செல்லும் அணுகு சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. தவுட்டுப்பாளையத்தில் அணுகு சாலை பிரியும் இடங்களில் லாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் வருபவர்கள் கடைகளுக்கு செல்லும் போதும், காவிரி ஆற்றில் குளிக்க செல்லும் போதும், வாகனங்களை சாலையில் வரிசையாக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிவேகத்தில் வரும் பிற வாகனங்கள், அணுகு சாலையில் பிரிந்து செல்ல முற்படும்போது, நின்றுள்ள வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இவர்கள், மீது வாகனங்கள் மோதவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தவுட்டுப்பாளையத்தில் அணுகு சாலையில் வாகனம் நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை