உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 7 கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு

7 கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு

குளித்தலை, குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி, பட்டவர்த்தி, கே.பேட்டை ஆகிய கிராமங்களில் நடந்த பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு, மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் அருண்மொழி தலைமை வகித்தார்.தி.மு.க., ஒன்றிய செயலர் தியாகராஜன், மாஜி மாவட்ட பஞ்., குழு துணைத்தலைவர் தேன்மொழி, கூட்டுறவு தனி அலுவலர்கள் மல்லிகா, பொறியாளர் அணி ஹரிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்து, பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.இதேபோல் பொய்யாமணி பஞ்., தோட்டையார் தோட்டம், திருச்சாப்பூர், கோரைக்களம், இனுங்கூர் பஞ்., காசா காலனி ஆகிய கிராமங்களில் ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், இனுங்கூர் ராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ