உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / படியில் தொங்கியபடி பயணம் விபத்தில் சிக்கும் பயணிகள்

படியில் தொங்கியபடி பயணம் விபத்தில் சிக்கும் பயணிகள்

கரூர்: கரூர் பகுதிக்கு டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை நிறுவனங்களில் பணிபுரியவும், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கவும், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ்களில் வரும்போது, காலை, 9:30 மணி வரை கூட்டம் அலைமோதுகிறது. இதில், திருச்சி மார்க்கம், திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரும், அரசு, தனியார் பஸ்களில் படியில் தொங்கியபடி, ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். டிரைவர்கள் அவசரத்திற்கு பிரேக் அடித்தாலோ அல்லது அதிவேகமாக செல்லும் மற்ற வாகனங்கள் உரசி சென்றாலோ படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பஸ்சில் இடம் இருந்தும் சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் தினசரி படியில் பயணிப்பதும் தொடர்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பஸ் படியில் தொங்கி பயணிப்பதால் பல்வேறு உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை