உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சி அவசர கூட்டத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநகராட்சி அவசர கூட்டத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கரூர்::கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம் மேயர் கவிதா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கரூர் திருவள்ளூர் மைதானத்தில், ராஜலிங்கம் மன்றத்தை இடித்து விட்டு, 6.90 கோடி ரூபாயில் நமக்கு நாமே திட்டத்தில் நுாலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதி மட்டும், 1959 ம் ஆண்டு விளையாட்டு மைதானம் பாதுகாப்பு சட்ட பிரிவில் இருந்து விலக்கு அளிக்க, உள்ளூர் திட்ட குழு மற்றும் நகர இயக்குனர் மூலம் அரசிடம் அனுமதி கோரப்படுகிறது. கரூர் தான்தோன்றிமலை பழைய எஸ்.பி., அலுவலக இடத்தில், நமக்கு நாமே திட்டத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில் பெண்கள் விடுதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்த பின் சமூக நலத்துறை வசம் ஒப்படைக்க அனுமதிக்கலாம் ஆகிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை