உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெரும்பாலான நோயாளிகள், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். பகல் நேரங்களில் சிறப்பான சேவையை வழங்கி வரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை, இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வரும் நோயாளிகளை, கரூருக்கு சென்று பார்த்துக் கொள்ளுமாறு செவிலியர்கள் கூறி விடுகின்றனர்.சில சமயங்களில், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் சிலர் இறப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டுமென அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி