உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிப்பாட்டுக்காரர் கொட்டகை அகற்றம் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

குடிப்பாட்டுக்காரர் கொட்டகை அகற்றம் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

குளித்தலை: குளித்தலை அருகே, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவில் பிரகாரத்தில் பல ஆண்டுகளாக குடிப்பாட்டுக்காரர்கள் கட்டடம் கட்டி, -திருவிழா காலங்களில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் அரசு அனுமதியில்லாமல் நிரந்தர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் கொட்டகையை அகற்றியது. ஹிந்து சமய அறநிலைய துறையை கண்டித்து, அந்த பிரிவினர் ஆ.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்தது.இதையடுத்து நேற்று இரவு, குளித்தலை தாசில்தார் மகுடேஸ்வரன் தலைமையில் எஸ்.ஐ.. பிரபாகரன், மண்டல தாசில்தார் சித்ரா, கோவில் செயல் அலுவலர் அமரநாதன் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால், அந்த தரப்பினர் திட்டமிட்டப்படி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறிவிட்டு, வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை