கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
கரூர்,:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மேலஒரத்தை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; விவசாயி. இவரது, 60 அடி ஆழமுள்ள கிணற்றில், தேசிய பறவையான மயில், தவறி விழுந்தது.ஆனால், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மயில் பறக்க முடியாமல் தவித்தது. இது குறித்து தகவலறிந்த புகழூர் தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். பின், அடர்ந்த காட்டுப்பகுதியில் விட மயிலை கொண்டு சென்றனர்.