கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் தலைமையில், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ரயில், விமானத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். மத்திய அரசின், எட்டாவது ஊதிய குழு பரிந்துரைகளை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் மோகன் குமார், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சோமசுந்தரம், தணிக்கையாளர் செந்தில் குமார், அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.