உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விடுமுறையால் ஆசாத் பூங்காவில் குவிந்த மக்கள், குழந்தைகள்

விடுமுறையால் ஆசாத் பூங்காவில் குவிந்த மக்கள், குழந்தைகள்

கரூர்:கரூர் ஆசாத் பூங்காவில், விடுமுறை நாளையொட்டி, நேற்று ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குவிந்தனர்.கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, ஆசாத் பூங்கா பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், பூங்காவில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்தன. கரூர் மாநகராட்சி புதிய அலுவலகம் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கட்டும் பணிகள் தொடங்கிய போது, பூங்கா பராமரிப்பு பணிகளும் தொடங்கியது.மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவுக்குகள், நடை பயிற்சி தளம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் புதிதாக அமைக்கப்பட்டது. சீரமைப்பு செய்யப்பட்ட புதிய ஆசாத் பூங்கா கடந்த, 2021ல் திறக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், பொது மக்கள் குழந்தைகளுடன் ஆசாத் பூங்காவில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் டீ கடைகள், ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ