உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மக்கள் வேண்டுகோள்

ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மக்கள் வேண்டுகோள்

கிருஷ்ணராயபுரம், கீழ மாயனுாரில் உள்ள, அமராவதி பாசன வடிகால் வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் தென்புறம் கட்டளை கரை வாய்க்கால் அருகில், அமராவதி பாசன வாய்க்கால் வடிகால் உள்ளது.இதன் வழியாக மழை காலங்களில் வரும் மழைநீர் வடிந்து, காவிரி ஆற்றில் செல்லும் வகையில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. தற்போது வடிகால் வாய்க்கால் வடிநீர் வடிந்து செல்லும், ஷட்டர் அருகில் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருகிறது. இதுனால் காவிரி ஆற்றில் குறைந்தளவிலேயே தண்ணீர் செல்கிறது. எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை