தீபாவளி விற்பனையில் மக்கள் மும்முரம் கரூர் கலெக்டர் அலுவலகம் வெறிச்
தீபாவளி விற்பனையில் மக்கள் மும்முரம்கரூர் கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'கரூர், அக். 29-தீபாவளியை முன்னிட்டு, மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. வரும், 31ல் தீபாவளி கொண்டாடும் நிலையில், நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது. பண்டிகைக்கு இரண்டு நாட்கள் நாள் மட்டுமே இருந்ததால், பொதுமக்கள் குடும்பத்தாருடன் தீபாவளி விற்பனையில் பிஸியாகி விட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு குறைந்தளவே மக்கள் வந்திருந்தினர்.இதனால், கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது, சிலர் மட்டுமே மனுக்கள் அளித்து சென்றனர். வழக்கமாக, 400 மனுக்கள் வரும் நிலையில் நேற்று, 227 மனுக்கள் வரப்பெற்றன. கலெக்டர் தங்க வேல் தலைமையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இரு மாற்றுத்திறனாளிகளுக்கு, 64 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன செயற்கை கை மற்றும் கால் வழங்கப்பட்டது.கூட்டத்தில், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, மகளிர் திட்ட இயக்குனர் பாபு, உதவி ஆணையர் கலால் கருணாகரன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.